Balachandran – Prabhakaran – Srilankan Army – Hitler – Disaster approaching Lanka, very soon! :D

இது தொடர்ந்து கொண்டே இருந்தால், இலங்கைக்கு இயற்கையினால் வரும் பேரழிவு நிச்சயம்!

Image

#அப்பாவி தமிழர்களின் சாபம் உங்களை சும்மா விடாது! கோழை பசங்களா..!

Image

இந்த சின்ன பய்யன் ஒங்கள என்னடா பண்ணான்? பொ_ட நாயிகளா!Image

இராவணன் வாழ்ந்த பூமி என்று நிருபிக்கிறீங்களே டா!

thuvaraka1

அடேய்! இத செய்ய சொல்றவன் காக்கா கொத்தி தின்கிற அளவுக்கு சாவான்!
Image
ஒன்னத்தாண்டா, நாயே நாயே! ஒளிஞ்ச டா நீயி!
Image
இது அதுக்கு மேல நம்ம நாட்டுல நடக்குற அலப்பர! சி சீ சீ சீ ச்சி ச்சை! து!
Image
மனிதநேயம் உள்ள நீங்கள், உங்க கமெண்ட்ஸ் கீழ கண்டிப்பா அடிங்க மக்களே!

 

Advertisements

Rowan Atkinson (a) Mr.Bean (a) The Savior!

An Electrical Engineer to Comedian to a life saver..

British actor Rowan Atkinson (well known as Mr. Bean) once saved a plane-load of passengers during a flight, after the pilot fainted!
Image
The Mr. BEAN star was traveling from Mombasa to Nairobi in Kenya with his family on a private plane, when the pilot fell unconscious. At 4,877 meters, the comedian stopped the plane heading towards the ground, despite having no experience of flying an Aeroplane. Rowan’s wife SUNETRA frantically tried to wake the pilot by shaking him and throwing water over him while her husband took charge of the plane. Luckily for the family, the pilot regained consciousness after a few minutes and landed the plane safely!!

புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?

உயிர் உடைத்த புகைப்படம்…

புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?

கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது.

1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.

குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.

பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார்.

இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது அவரது நற்பேறு என்றுதான் கூற வேண்டும்.

பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்.

அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.

தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.

ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.
Image
எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.

கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’ செய்தார்.

இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.

இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.

இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டனர்.

அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா?
இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.

1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.

விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.

‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் அல்லது சாண்ட்விச் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.

புகைப்பட வல்லுநர் கெவின் விரைவில் ஜோஹன்ஸ் பர்க் திரும்பி விட்டர். இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார்.

கெவின் தற்கொலை செய்துகொண்டார்.

அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன. முதல் வரி I am Really, Really Sorry.

இன்று பல்வேறு செய்தி சேனல்களிலும் அடிபட்டும் விபத்துக்குள்ளாகியும் இரத்தச் சிதறலில் துடித்துக் கிடப்பவர்களைப் படங்களாய்ப் பார்க்கும் போதும் அவர்களின் அபயக் குரலைக் கேட்கும் போதும் ஏனோ கெவின் கார்ட்டர் நினைவுக்கு வருகிறார்:(

நன்றி : சமரசம் இதழ்

‘பளிச்’ கேள்வியால் அப்துல் கலாமை கவர்ந்த யாழ்ப்பாணம் மாணவி!

கொழும்பு: ஈழத் தமிழர் தாயகமான யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், அங்கு இந்துக் கல்லூரி மாணவர்களை சந்தித்துப் பேசினார். அப்போது ஒரு மாணவி கேட்ட கேள்வி அவரை வெகுவாக கவர்ந்தது. இதுபோல ஒரு கேள்வியை இதுவரை நான் கேட்டதில்லை, இப்படி ஒரு திறமையான மாணவியை சந்தித்ததில்லை என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் கலாம்.

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட கலாம் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.அங்குள்ள இந்துக் கல்லூரியை பார்வையிட்ட அப்துல் கலாமிடம் ஆறு மாணவ மாணவிகள் கேள்விகளை எழுப்பினர்.

அதில் சிறு மாணவன் ஒருவன், ஐயா நீங்கள் யாழ்ப்பாணம் வந்ததற்கு நான் மிகவும் பெருமையடைகின்றேன். உங்களைப் போன்று நானும் வரவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பினான்.

அந்த மாணவனது இந்தத் திடீர் கேள்வி அனைவரையும் கவர்ந்ததுடன் பலத்த கைதட்டலையும் பெற்றது. அதற்கு பதிலளித்த அப்துல் கலாம் நீ கடின உழைப்பாளியாகவும் லட்சிய தாகமுடையவனாகவும் நேர்மையாளனாகவும் விடாமுயற்சி உடையவனாகவும் இருந்தால் உனது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

மாணவி ஒருவர் பொறுப்புள்ள பிரஜையாக திகழ நான் என்ன செய்ய வேண்டும் என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கலாம், உனது இதயத்தில் நேர்மை இருந்தால் உனது செயலில் அழகு இருக்கும். செயலில் அழகு இருந்தால் வீட்டில் அமைதி இருக்கும். வீட்டில் அமைதி இருந்தால் நாட்டில் அமைதி இருக்கும். நாட்டில் அமைதியிருந்தால் உலகில் சமாதானம் இருக்கும் என்று ஆங்கிலத்தில் பதிலளித்தார். பின்னர் தனது பதிலை அனைவருக்கும் கேட்கும் வகையில் நீயே கூறு என்று கேட்டுக் கொண்டார்.


இதையடுத்து அந்த மாணவி Where there is righteousness in the heart there is beauty in the character. When there is beauty in the character there is harmony in the home. When there is harmony in the home there is an order in the nation. When there is an order in the nation there is peace in the world என்று பளிச்சென தெரிவித்தார்.

இதையடுத்து நேற்று கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த கலாம் இந்த மாணவி குறித்து குறிப்பிட்டுக் கூறி பாராட்டினார். அவர் கூறுகையில், இப்படி ஒரு திறமைவாய்ந்த மாணவியை நான் முன்னர் ஒருபோதும் சந்தித்தது கிடையாது. அந்த மாணவி கேட்ட கேள்விக்கு பதிலளித்த நான் அந்த பதிலைத் திருப்பிக் கூறுமாறு தெரிவித்தேன். உடனடியாக அவர் அதனை திருப்பிக் கூறினார். அவ்வாறு மிகத் திறமையான மாணவியை நான் சந்தித்தது யாழ்ப்பாணத்தில் தான் என்றார் நெகிழ்ச்சியுடன்.

வழக்கமாக அப்துல் கலாம் வருகிறார் என்றால் மாணவர்களிடையே பெரும் ஆர்வம் அலை மோதும், கூட்டமும் மிகுதியாக இருக்கும். ஈழமும் இதில் விதி விலக்கல்ல, யாழ்ப்பாணம் சந்திப்பிலும் கூட மிகப் பெரிய அளவில் மாணவர் பட்டாளம் திரண்டு வந்திருந்தது.

 

Thanks,

Tamil One.