நடிகர் ரஜினிகாந்த் – பிறந்தநாள் வாழ்த்து (இன்றைய தெளிவான இளைஞர்களிடம் இருந்து….)

பின்குறிப்பு: நாங்கள் ரஜினி எதிர்ப்பாளர்கள் இல்லை! படையப்பா படத்தை 100 முறையையும் தாண்டி இன்னும் பார்த்துக்கொண்டிருக்கும் உங்களைப் போன்ற ரசிகர்களுள் சிலர் எழுதும் விழிப்புணர்வு பதிவே இது! இந்தப் பதிவு எவரது மனதையும் புண்படுத்த எழுதப் பட்டதல்ல! உண்மை என்னவென்று மக்களுக்கு குறிப்பாக, இன்றைய நாட்டின் கண்கள் – நமது இளைஞர்களுக்குத் தெரிவிப்பதற்க்கே! 🙂

“நடிகன் எல்லாம் தலைவன்”, ஆனால் உண்மை: தன்னலமற்ற தலைவர்களை என்னவென்று சொல்வது?

Image

நாட்டுக்காக கார்கில் போரில் உயிரைத் துறந்தானே அவனை நினைத்தது உண்டா?

இல்லை!

அந்த போரில் கை, கால் இழந்து இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களை அறிந்தது உண்டா?

இல்லை!

நாமனைவரும் நலமாக வாழ கடும் குளிர், பணிப்புயல் போன்றவற்றில் சிக்கித் தவிக்கும் நமது இந்திய ராணுவத்திற்காக எவனாவது காவடி தூக்கியதுண்டா/வேண்டுதல் நிறைவேற்றியதுண்டா?

இல்லை!

ஒரு நடிகனை நல்ல கலைஞனாக மட்டும் பாருங்கள்! இப்படி இவர்களை தலைவன் என்று

நம்மில் திரியும் சில விடலை குஞ்சுகளால் தான் தமிழகத்தை கடந்த 40 ஆண்டுகளாக நடிகர்கள், அதுவும் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் கூட்டுக்குடும்பங்கள் போன்றவர்கள் ஆட்சி செய்கின்றனர்!

Image

தலைவனை கோடம்பாக்கத்தில் தேடாதிர்கள்! எண்ணற்ற தன்னலமற்ற தலைவர்கள் இந்த நாட்டில் உண்டு. அவர்களை போற்றுங்கள்!

Image

இந்த தேசம் இந்த தமிழ் இனத்திற்க்காக இந்த நடிகர்கள் என்ன செய்தார்கள், அல்லது உங்களுக்குதான் என்ன செய்தார்கள்? இவர்களை தலைவா என்றழைக்க இது இந்த தமிழினத்தின் சாபக்கேடு! நேற்று பாரதி பிறந்தநாள் அவனை நினைவு கூர்ந்ததுண்டா….. நடிகனை ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் பாருங்கள் என் போற்றுதலுக்கும் என் அன்பிற்கும் இனிய உறவுகளே!

இனியாவது “தலைவர்” என்று மொட்டையாக யாரையும் அழைக்க நாம் யோசிப்போம்! ரஜினிகாந்த் திரைத்துறையில் ஒரு தலைவர். இதில் தன்னலமற்றவர், எளிமையானவர் – என்று ஆஹா ஓஹோ எனப் புகழ்ந்து உங்கள் வீட்டையும், குடும்பத்தையும் எதிர்காலத்தையும் மறந்து விடாதீர்கள்!

Image
நமக்கு திரை விருந்து அளிப்பவரை தாராளமாக கொண்டாடலாம்! ஆனால், எதற்கும் ஒரு அளவு உண்டு என்பதனை மறவாதீர்! நாளை உங்கள் பிள்ளைகளையோ, ஏன்? உங்களையோ கூட அவர்கள் சிரமமான சூழ்நிலையில் கவனிக்கப் போவதில்லை! அவர்கள் வந்ததே தங்களின் சொந்த வியாபாரத்துக்கும் வணிகத்துக்காகத்தான்!
ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் மக்கள் இதனைப் புரிந்துக்கொள்ள ஆரம்பித்து விட்டனர்!
“சினிமாவில் நடிப்பவர்கள் எல்லாம் ஆட்சி செய்ய முடியாது, அது வெறும் நடிப்பு!” – என்னும் விஷயத்தை! 🙂 சமீபத்திய தேர்தல்கள் அதை அப்பட்டமாக காட்டுகின்றன! நல்லது!
Image
😀
Image
இன்னும் சில “பகிரங்க” நகைச்சுவைகள் அரங்கேற்றப்பட்டன! 😆
Image
😆
Image
😆
Image
இன்றைய இளைஞர்களுக்கு: உங்கள் தரத்தை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள்! நல்ல ஆட்களைப் பின்பற்றுங்கள். அது ரஜினி ஆனாலும் பரவா இல்லை! நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள்! புகைப் பிடிப்பதும் தண்ணி அடிப்பதும் ஆம்பளைத்தனம் கிடையாது என்பதை இந்த காலத்து சீரழியும் பெண்கள் சிலர் பப், பார்-களில் நாசமாய் போவதை வைத்தே தெரிந்துக் கொண்டிருப்பீர்!
Image
திரு. ரஜினிகாந்த் அவர்களே! உங்கள் பிறந்தநாள் அன்று உங்களுக்கொரு செய்தி! “எளிமை, எளிமை” – என்று கூறும் பட்டத்தை நீங்களாக ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். அப்படியானால், உங்களுடைய அம்பது அடி உயர கட்-ஔட், அதற்கு பால் அபிஷேகம் – போன்றவையை எல்லாம் எதற்கு நீங்கள் எதிர்க்கவில்லை?
anyways, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், திரைத்துறையில் பல ஸூப்பர் ஸ்டார்களுள் சிறந்த ஸ்டார்: திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு! 🙂
ஃபேஸ்புக்கில் அதிகமாக இன்றைய மக்களால் பகிரப்பட்ட ஒரு செய்தியையும் இணைத்துள்ளோம்: மகிழ்ச்சி! 🙂
“ரஜினிகாந்த் – அழகு தேவை இல்லை என்று நிரூபித்தவர்… கருப்பு நிறத்தை கிண்டல் செய்வதை நிறுத்த வைத்தவர்…
Image
அழகாயில்லையே என்ற தாழ்வு மனப்பான்மையை பலரிடம் இருந்து அகற்றியவர் என்ற முறையில் (மட்டும்) ரஜினி பலருக்கு முன்னோடிதான்.
Image
ஆன்மீக விஷயத்தில் அவர் பண்பை பாராட்டுகிறேன்… இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!அவர் ஒரு நடிகர். DOT. நடிகர் என்ற ரீதியில் மட்டும் பாருங்கள்… அதை தவிர அதீத முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்பதையும் இங்கு நட்புகளிடம் கேட்டு கொள்கிறேன்.”

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s