திறமை பெண்ணாக இருக்கும்போது… பரிதாபம்!

அண்மையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது தேவயானி குமுறிய விடயம் இது. இப்போது உள்ள ஹீரோக்கள் எல்லாம் என்னை தங்களுக்கு அம்மாவாக நடிக்க அழைப்பு மேல் அழைப்பு விடுகிறார்கள் அது கூட பராவாயில்லை முன்பு நான் யார் யாருடன் ஜோடி போட்டேனோ
அவர்களே என்னை தங்களுக்கு அம்மாவா நடிக்க அழைப்பதுதான்
வேதனையாக இருக்கு என்று சொல்லியவர் உதாரணமாக ஒரு
சம்பவத்தையும் குறிப்பிட்டார்.

அஜித்தின் சூப்பர் ஹிட் திரைப்படமான “வரலாறு” திரைப்படத்தில் அஜித்துக்கு அம்மாவாக நடிக்க அழைத்ததாகவும்(பின்பு கனிகா நடித்த வேடம்) அதற்க்காகாக பெருந்தொகை ஒன்றை சம்பளமாக தர முன்வந்த போதும் “எனக்கு சம்பளம் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை”என்று கூறி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் முன்பு அஜித்துடன் பல படங்களில் நான் ஜோடியாக நடித்துள்ளேன், எங்கள் ஜோடிப்பொருத்தம் ரசிகர்களிடையே மிக பிரபலமானதும் கூட இப்படி இருக்கும் போது நான் எப்படி அஜித்துக்கு அம்மாவாக நடிக்க முடியும்? என்று எதிர்கேள்வி கேட்டு ஆதங்கப்பட்டவர். பின்பு பிற்காலத்தில் நான் அம்மாவாக நடித்தால் கூட புதுமுக நடிகர்களுக்கு மட்டுமே அம்மாவாக நடிப்பேன் கண்டிப்பாக நான் ஜோடியாக நடித்த நடிகர்களுக்கு மட்டும் ஒருபோதும் அம்மாவாக நடிக்கமாட்டேன் என்று சற்று காட்டமாகவே சொல்லி இருந்தார்.

அண்மையில் நடந்த விஜய் டிவியின் “விஜய் அவாட்ஸ்” நிகழ்ச்சியில் தேவயானி. இது தேவயானியின் தனிப்பட்ட முடிவு என்று சொல்லி இதை நாம் மேலோட்டமாக பார்க்காமால் கொஞ்சம் உற்றுப்பார்த்தால் உள்ளே தமிழ்சினிமாவின் அராஜகம் கைகொட்டி சிரிப்பது தெரியும். முன்பு அஜித்-தேவயாணி ஜோடி மிகப்பிரபலம். கல்லூரிவாசல் படம் மூலம் முதன் முதலில் ஜோடி சேர்ந்தவர்கள், அதன்பின் வெளிவந்து தேசியவிருது பெற்ற மெகாஹிட் படமான “காதல்கோட்டை” மூலம் மிகச்சிறந்த ஜோடியாக ரசிகர்களாக கணிக்கப்பட்டார்கள். பின்பு தொடரும்.., நீ வருவாய் என.. போன்ற படங்களில் கூட வெற்றிகரமான ஜோடியாகவே வலம்வந்தார்கள் பின்பு தேவயானியின் திடீர் காதல் திருமணத்தால் தேவயானிக்கு சினிமாவாய்புக்கள் மறுக்கப்பட முன்பு யாருடன் ஜோடிபோட்டு பிரபலமானாரோ இப்போது அவருக்கே அதே அஜித்துக்கே அம்மாவா நடிக்க வைக்க தேவயானியை தமிழ்சினிமா முயற்சிப்பதுதான் வேடிக்கை.

இது தமிழ்சினிமாவின் போக்கிரித்தனம். ஹீரோ என்பவன் எப்போதும் இளமையாகவே இருப்பான் அவனை எப்போதும் ரசிக்க ரசிகர்கள் இருப்பார்கள் அவன் அறுபது வயதில் கூட பதினாறு வயது ஹீரோயினுடன் ஆடிப்பாடுவதை சகிப்பார்கள் என்று நினைக்கும் தமிழ்சினிமா, கதாநாயகிகள் விடயத்தில் மட்டும் எதிர்ப்புறமாய் நினைப்பதுதான் அராஜக போக்கின் உச்சம்.

Image

அடுத்த மாதம் வரவிருக்கும் முகேஷ் ஜோடியாக தேவயாணி நடித்திருக்கும் “சர்க்கார் காலனி” திரைப்படத்தில் இருந்து..

ஒரு நடிகைக்கு இருக்கும் செல்வாக்கு அவர் திருமணத்தின் பின் எப்படி குறைந்து போகும் என்பதுதான் எனக்கும் ஆச்சரியமான விடையம்.
மலையாள பக்கம் போனால் அங்கே இப்போதும் தேவயாணி ஹீரோயினாக
நடித்துக்கொண்டுதான் இருக்குறார். அடுத்தமாசம் தேவயாணி
முகேஷுடன் ஜோடிபோட்ட “சர்க்கார் காலனி” திரைப்படம் வெளிவர இருக்கின்றது. ஏன் சுகன்யா சோபனா எல்லாம் இப்பவும் கதாநாயகிகளாக
மலையாளத்தை வலம் வருகிறார்கள்.

ஏன் இந்திய சினிமாக்களுக்கே முன்னோடிகளாக இருக்கும் ஹிந்தி சினிமாக்களில் கூட நடிகைகள் விடையத்தில் நியாயமாகவே நடந்து கொள்கிறார்கள். திருமணத்தின் பின் கூட ஐஸ்வர்யா ராய் அங்கே இப்போதும் முன்னணி நடிகைதான் அவர் திருமணம் அவர் செல்வாக்கையோ திரைப்பட வாய்ப்புக்களையோ எந்த விதத்திலும் பாதிக்க வில்லை. ஏன் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவான பின்பு கூட கஜோல் ஷாருக்கானுடன் ஜோடிபோட்டு அசத்துகிறார். இப்போது கூட கஜோளுடன் ஜோடிபோட பாலிவுட் ஹீரோக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால் நம்மூர் ஹீரோக்கள்..??

ஹீரோயினை தலையில் வைத்து கொண்டாடும் இவர்கள் அவர்களுக்கு திருமணமாம் என்ற செய்தி வந்தாலே போதும் எவ்வளவு தூரம் தூக்கினார்களோ அங்கே இருந்தே கீழே போட்டுவிடுவார்கள். இதற்க்கு நல்ல உதாரணம் சிம்ரன். தமிழ்சினிமாவில் முன்னியில் இருந்தபோது சிம்ரனுடன் ஒரு படத்தில் ஆவது ஜோடி போட்டுவிடவேனும் என்று அலைந்த ஹீரோக்களே நம் ஹீரோக்கள்.

பரபரப்பாக இருக்கும்போதே திருமணம் செய்துகொண்ட சிம்ரன் திருமணத்தின் பின்பு நடிக்கவந்து முட்டிமோதிப்பார்த்தார் கதாநாயகி வாய்ப்புக்கொடுப்போர்தான் யாருமில்லை. முன்பு யார்யாரெல்லாம் சிம்ரனுடன் ஜோடிபோட துடியாய் துடித்தார்களோ அவர்களே சிம்ரனை தங்களுக்கு அம்மாவாகவும் அக்காவாகவும் நடிக்க அழைத்ததுதான் வேதனை. இதுதான் இன்று தமிழ்சினிமாவில் நடிகைகளுக்கு உள்ள நிலைமை.

அஜித்-தேவயாணி ஜோடி…
உண்மையிலேயே தமிழ்சினிமாவில் அதிததிறமை இருந்தாலும் திருமணமாகிவிட்டால் அவர்கள் ஹிரோயினாக நடிப்பதை ரசிகர்கள் விரும்பவில்லையா?? அல்லது தமிழ்சினிமாவை மிகஅதிகமாக ஆண்களே
ஆக்கிரமித்து இருப்பதால் திருமணமான ஹீரோயின்களை தங்கள் படங்களில் பயன்படுத்தினால் அவர்களால் பல வழிகளில் தங்களுக்கு
ஒத்துழைப்பு தரமுடியாது என்று நினைக்கிறார்களா?? இதில் எது உண்மை??
கடந்தகால தமிழ்சினிமாவில் இப்படிப்பட்ட அவல நிலை இல்லை என்றே சொல்லவேண்டும். திருமணத்தின் பின்பு கூட சொவ்கார்ஜானகி, கே.ஆர் விஜயா, சாவித்திரி போன்றவர்கள் ஒரு கலக்கு கலக்கினார்கள். ஏன் இப்போது கூட நாங்கள் பழைய திரைப்படங்களைப்பார்க்கும் போது கே.ஆர் விஜயா சாவித்திரி போன்றவர்கள் தொலைக்காட்சி பெட்டியை மறைக்கும் உருவத்துடன் நின்று கொண்டு அத்தான் எனக்கு வெக்கமாக இருக்கு என்றோ.. அத்தான் என்னை கைவிட்டு விடாதீர்கள்.. என்று காதல் வசனம் பேசுவது ஆச்சரியத்தை கொடுக்கும். அப்போது சினிமாவில் இருந்தவர்கள் கதையையும் நடிகர்கள் திறமையையும்தான் நம்பினார்கள் போல்.

கைவிடப்பட்ட “க்ளிக்” படத்தில் இருந்து ஒரு காட்சி…

இப்போது தேவயானியை எடுத்துகொண்டாள் கூட 1995 ஆண்டு காலப்பகுதியில் தமிழ்சினிமாவில் எவ்வித பின்பலமும் இன்றி ஒரு குத்தாட்ட நடிகையாக ஒரு பாடல் காட்சியில் அறிமுகமாகி தன் நடிப்பாற்றலால் முன்னனி நடிகையாக முன்னேறியவர். அவர் பிஸியாக நடித்துகொண்டிருந்த காலப்பகுதியிலேயே “தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதை” நான்கு முறை பெற்றதே அவரின் சிறந்த நடிப்புக்கு உதாரணம். பரபரப்பாக நடித்துகொண்டிருக்கும்போதே திடீர் என காதல் திருமணம் செய்துகொண்டார். தமிழ்சினிமாவின் சாபம் அவருக்கு மட்டும் விதிவிலக்கா என்ன..?? அவர் ஒப்பந்தம் ஆன “மானஸ்தன்” போன்ற பல படங்களில் இருந்து காரணமே இன்றி தூக்கி வீசப்பட்டார், அவர் நடித்து கொண்டிருந்த படங்கள் ஆன ” ரோசாப்பு சின்ன ரோசாப்பு” “தவமணி” “க்ளிக்” போன்ற திரைப்படங்கள் பாதிவளர்ந்த நிலையில் நிறுத்தப்பட்டன.

“லவ்லி”, “பம்மல் கே சம்மந்தம்” படங்களில் பல காட்சிகளில் நடித்துகொண்டிருந்த நிலையிலேயே தேவயாணி நீக்கப்பட்டு அவருக்கு பதில் மாளவிகா சினேகா போன்ற நடிகைகளை ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். இதில் பம்மல் கே சம்மந்தம் கமலின் திரைப்படம். ஒரு நல்ல நடிகையை திருமணம் செய்துகொண்டார் என்ற ஒரே காரணத்துக்காக நீக்குகிறார்கள் இதற்க்கு கமல் கூட மவுனமாக இருந்து ஆதரித்தமைதான் ஆச்சரியம். எது எப்படியோ “திருமணமாகிவிட்டது” என்ற ஒரே காரணத்துக்காக பல திறமையான நடிகைகளை ஒதுக்கி வைப்பது என்பது தமிழ்சினிமாவுக்கு ஆரோக்கியமான விடயம் அல்ல!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s