குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் பாம்பு வளர்ப்புத் தொழில்…!!

கரு நாகப்பாம்பு வளர்ப்பது எப்படி:
கரு நாகப்பாம்பு வளர்ப்பு தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. பண்ணை அமைத்து சிரத்தையுடன் தொழிலில் ஈடுபட்டால் லாபத்தை அள்ளலாம் என்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை யில் ‘ஸ்னேக் ஃபார்ம் இந்தியா’ நடத்திவரும் ஒருவர் கூறுகிறார் .
2004ம் ஆண்டு 5 ஜோடி கரு நாகப்பாம்புகளுடன் பெருந்துறையில் பண்ணை துவங்கினேன். அவை முட்டையிட துவங்கியதும் வேறொரு பண்ணையாளரிடம் கொடுத்து குஞ்சு பொரிக்க செய்து, அவற்றையும் சேர்த்து வளர்த்தேன். கரு நாகப்பாம்பு வளர்ப்பையே முழு நேர தொழிலாக மேற் கொண்டேன். தமிழகத்தில் கரு நாகப்பாம்பு எண்ணிக்கை குறைவு. ஒப்பந்த அடிப்படையில் கரு நாகப்பாம்புகளை வளர்க்க விவசாயிகளிடம் ஆர்வத்தை உருவாக்கினேன். சிரமம் இல்லாத வளர்ப்பு முறை, அதனால் கிடைக்கும் வருமானத்தை பார்த்து இன்று தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையிலும், சொந்தமாகவும் ஆயிரக்கணக்கானோர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சந்தை வாய்ப்பு!
கரு நாகப்பாம்புகளை விற்பனையாளர்கள் நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். அக்கம்பக்கத்தினர் வீட்டுத்தேவைக்கும், பாம்பாட்டிகளும் சர்கஸ் காரர்களும் வந்து வாங்கிச் செல்வர். விசேஷங்களுக்கும் வாங்கிச் செல்வார்கள். ஓட்டல்கள், உணவு விடுதிகளுக்கும் நேரடியாக ஆர்டர் பிடித்து சப்ளை செய்யலாம்.


பயன்கள்:
மற்ற பறவை, விலங்கி னங்களை ஒப்பிடும்போது கரு நாகப்பாம்புவில் கழிவு குறைவு. முட்டை, விசம், இறைச்சி, எண்ணெய் கிடைக்கிறது. கரு நாகப்பாம்புகளின் இறைச்சி மற்ற இறைச்சிகளை விட சுவையில் தனித்தன்மை வாய்ந்தவை. ஆடு, மாடு போன்ற கால்நடைகள்தான் சிவப்பு மாமிசம் கொடுக்கும். சிவப்பு மாமிசம் கொடுக்கும் பறவை இனம் கரு நாகப்பாம்பு. கரு நாகப்பாம்புகளை இறைச்சிக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. 4 முதல் 5 கிலோ எடை கொண்ட கரு நாகப்பாம்புகளை இறைச்சிக்காக வெட்டும்போது 1முதல் 2 கிலோ கொழுப்பு தனியாக கிடைக்கும்.
கொழுப்பை காய்ச்சி எண்ணெய் எடுக்கப்படுகிறது. 5 ஜோடி கரு நாகப்பாம்புகள் வளர்த்தால் 1/2 முதல் 3/4 லிட்டர் கரு நாகப்பாம்பு விசம் கிடைக்கும். சுத்திகரிப்பு செய்து வலி நிவாரணி, அழகு சாதன கிரீம்கள் தயாரிக்க பயன்படுத்தப்படு கிறது. ஒரு கரு நாகப்பாம்பில் 6 சதுரஅடி தோல் கிடைக்கும். மிருதுவாகவும், அதிக வலுவாகவும் இருப்பதால் செருப்பு, கைப்பை, பர்ஸ்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
ஒரு கரு நாகப்பாம்புகளை வீட்டில் வளர்ப்பதால் செல்வம் பெருகும் என்பது அவர்களது நம்பிக்கை.
கட்டமைப்பு
பண்ணை தொடங்க குறைந்தது 5 ஜோடி கரு நாகப்பாம்பு குட்டிகள் (ரூ.7500) வேண்டும். 4அடி நீளம், 35 அடி அகல இடம் வேண்டும். இடத்தை சுற்றி 5 அடி உயரம் கம்பி வேலி, தீவனம் மழையில் நனையாமல் இருக்க சிறிய ஆஸ்பெஸ்டாஸ் ஷெட், தீவனம் வைக்க 2 பாத்திரம், 10 மண்பாணை (இதற்கு செலவு ரூ.5 ஆயிரம்), முட்டைகளை பொரிக்க வைக்க இன்குபேட்டர் (ரூ.3 லட்சம்), சீரான மின் சப்ளைக்கு ஜெனரேட்டர் (ரூ.1 லட்சம்) போன்றவை வேண்டும்.
எங்கு வாங்கலாம்?
கரு நாகப்பாம்பு குட்டிகள் மற்றும் தீவனங்களை தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் உள்ள பாம்பு பண்ணைகளில் பெற்றுக் கொள்ளலாம். இன்குபேட்டர், ஹேச்சர் மெஷின் ஐதராபாத்தில் கிடைக்கும்.
குஞ்சுகள் தேர்வு
கரு நாகப்பாம்பு குட்டிகளை வாங்கும்போது பார்வை, கேட்கும் திறன் சரியாக உள்ளதா, நன்றாக கடிக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும்.
வருமானம்
3 மாத வயதுள்ள 5 ஜோடி கரு நாகப்பாம்பு குட்டிகள் வளர்த்தால் 6 மாதத்துக்குள் 3கிலோ எடையுள்ள கரு நாகப்பாம்புகள் கிடைக்கும். 5 ஜோடி வளர்க்கும்போது 100 முட்டைகள் கிடைக்கும். இதன்மூலம் தரமான நன்றாக கடிக்கக்கூடிய வீரியமுள்ள 60 பாம்புகள் கிடைத்தால் அவற்றை விற்று ரூ.4.5 லட்சம் சம்பாதிக்கலாம். 6 மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் தலா ரூ 1.5 லட்சங்கள் சம்பாதிக்கலாம்.

அ’னு’க வேண்டிய முகவரி :
ஃப்ராடு பாலா,
சீட்டிங் ல்காம்ப்ளெக்ஸ்
7th முட்டுச்சந்து
சென்னை 60000018
தொலை பேசி எண் : இனிமேல்தான் வாங்க வேண்டும்.

# ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஅ, இந்த முட்டாப்பயலுகள நம்ப வக்கிறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு.

அடுத்த பதிவில் ஒட்டகம் மற்றும் அதன் முட்டைகளை பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s