நாட்டில் உணவு தானியங்கள் வீணாவதை பாருங்கள்!

நாட்டில் உணவு தானியங்கள் வீணாவதை பாருங்கள் 
——————————————————————————
இது குறித்து பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. அதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் ஆகஸ்டு 12ம் தேதியன்று தானியங்கள் வீணாகும் முன்பு அவற்றை ஏழைகளுக்கு வழங்குங்கள் உணவு தானியங்கள் குடோன்களில் புளுத்துப்போவதையோ, கடலில் கொட்டி அழிப்பதையோ அல்லது எலிகளுக்கு அதை உணவாக்குவதையோ அனுமதிக்க முடியாது. வறுமை கோட்டுக்கு கீழே உள்ள பசியில் வாடும் ஏழைகளுக்கான தானிய ஒதுக்கீட்டை அதிகரித்து வழங்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொண்டது. அதற்கு பதிலளித்த மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார், உணவு தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்குங்கள் என உச்சநீதிமன்றம் அறிவுரைதான் வழங்கியுள்ளது. அது உத்தரவு அல்ல என கூறினார். இதனை கண்டித்த நீதிபதிகள், தாங்கள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டோம். அறிவுரை வழங்கவில்லை என தெரிவித்தனர். இப்பிரச்சினை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. உடனே மத்திய அமைச்சர் சரத் பவார், உச்சநீதிமன்றத்திற்கு உத்தரவிற்கு கட்டுப்பட்டு உணவு தானியங்களை ஏழைகளுக்கு வழங்குவதாக உத்தரவாதம் கொடுத்தார். என்று, அந்த உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டு உள்ளனர்.

இதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புக்கொண்டது. இந்நிலையில் பத்திரிக்கை ஆசிரியர்களை தனது இல்லத்தில் சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அரசின் கொள்கை விஷயங்களில் தலையீடுவதை உச்சநீதிமன்றம் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும், ஏழைகளுக்கு இலவசமாக உணவு தானியங்களை வழங்குவது என்பது நடைமுறைக்கு ஒவ்வாத செயல் என கூறி..25 லட்சம் டன் உணவு தானியங்களை ஏழைகளுக்கு மிகக்குறைந்த விலையில் வினியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இலவசமாக தர இயலாது என்றார். 😦

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s